வெள்ளிமணி

சக்தி பீடம் 51: அட்டாஸ்  புல்லாரா!

மேற்கு வங்காளத்தில் லாப்பூர் என்ற ஊருக்கு அருகே உள்ளது புல்லாரா தேவி ஆலயம். 51சக்தி பீடங்களில் 11வது பீடமாக இது விளங்குகிறது.

அ.கு. பார்வதி

மேற்கு வங்காளத்தில் லாப்பூர் என்ற ஊருக்கு அருகே உள்ளது புல்லாரா தேவி ஆலயம். 51சக்தி பீடங்களில் 11வது பீடமாக இது விளங்குகிறது. தேவியின் உடற்கூறுகளில் கீழ் உதடு விழுந்த இடமாக இது கருதப்படுகிறது.

லாப்பூரில் உள்ள அட்சர சக்தியின் திருநாமம் புல்லாரா எனவும், úக்ஷத்ர பாலகர் விஸ்வேஷ்வர் என்ற திருநாமத்துடனும் அருள் பாலிக்கின்றனர். இந்தத் தலத்தை புல்லாரா அட்டாஸ் என்பார்கள். அட்டஹாஸ் என்றால் பெருஞ்சிரிப்பு என்று பொருள்.

அட்டாஸில் அமைந்துள்ள இக்கோயிலின் கருவறையில் நாம் தேவியின் உருவை தரிசிக்க முடியாது. பதிலாக அங்கு கருங்கல்லால் அமைக்கப்பட்ட ஆமை உருவத்தில்தான் தேவி காட்சியளிக்கிறாள். இங்குள்ள மக்கள் இந்த உருவத்தையே புல்லாரா தேவியாக வணங்குகிறார்கள். இந்தக் கோயிலுக்கு அருகிலேயே சிலை உருவில் சிவ-பார்வதிக்கு ஓர் அழகான கோயிலும் அமைந்துள்ளது. இங்கே ஆண்டு தோறும் ஜனவரி மாத பெüர்ணமி அன்று திருவிழா களைகட்டும்.

கோயில் அருகிலேயே குளம் ஒன்றும் உள்ளது. மகரிஷி வசிஷ்டரின் சொல்படி ஒரு முறை சீதாபிராட்டியுடன் ராமர், துர்கா பூஜைக்கு ஏற்பாடு செய்தார். இந்த பூஜைக்கு 108 நீலத் தாமரை மலர்கள் தேவைப்பட்டன. இதை அறிந்த ஹனுமன் இக்குளத்தில் வந்து அதில் பூத்துக் குலுங்கும் நீலத் தாமரைகளைச் சேகரித்துச் சென்றதாக புராணங்கள் கூறுகின்றன.

புல்லாரா தேவியின் ஆலயம் யாத்திரைத் தலமாகவும், சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. புல்லாரா தேவியை "குஹ்யேஸ்வரி' என்றும் அழைக்கின்றனர். இங்கே கருவறையில் நடுநிசி வேளைகளில் அட்டகாசமாக பெருஞ் சிரிப்பொலி கேட்குமாம். அது கேட்போரை அதிர வைக்கும் என்றும், அதனால் இந்த பீடத்துக்கு அட்டாஸ் என்று பெயர் வந்ததாகவும் வரலாறு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெர்லின் திரைப்பட விழாவில் அசாம் பெண் இயக்கிய படத்துக்கு விருது!

பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு!

#t20wc | இலங்கை bowling எப்படி இருக்கு? | T20 World Cup Review | #SLvsENG

#t20 | இலங்கை Batting எப்படி இருக்கு? | T20 World Cup2026 Review | #SLvsENG |

தில்லி: வீட்டில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றபோது சிலிண்டர் வெடித்து 13 பேர் காயம்

SCROLL FOR NEXT